Asianet News TamilAsianet News Tamil

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி... குவியும் பாரட்டுக்கள்..!

குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார்.  

The female IAS officer who returned to work in Corona 14 days after giving birth
Author
Uttar Pradesh West, First Published Oct 13, 2020, 10:34 AM IST

உ.பி மாநிலத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா பாண்டே. மோதிநகர் சப் டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய இவர் கடந்த ஜூலை மாதம் காசியாபாத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் வரை பணியில் இருந்த கர்ப்பிணியான சவுமியா பிரசவ விடுப்பு எடுத்து கொண்டு விடுமுறையில் சென்றார்.  அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின் இரண்டு வாரம் கழித்து தனது பணிக்கு மீண்டும் திரும்பி அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளார்.

 The female IAS officer who returned to work in Corona 14 days after giving birth

இதுகுறித்து அவர், ‘’நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அதனால் எனது பணியை நான் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார்.  இதேபோன்று எனது குழந்தையுடன் நிர்வாக பணியை நான் கவனித்து கொள்வதென்பது கடவுளின் ஆசி.

எனக்கு குடும்பம் போன்று மாவட்ட நிர்வாகம் எனது பிரசவத்தின்போது மற்றும் பிரசவத்திற்கு பின்னரும் முழு ஆதரவு வழங்கியது. கொரோனா காலத்தில் பணியாற்றும்பொழுது ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும்’’என அவர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios