The election can not be accepted - H Raja

சாரணியர் - சாரணியர் தேர்தல் வாக்குப்பதிவை திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே தொடங்கியதாகவும், சாரண - சாரணியர் தேர்தலை ஏற்க முடியாது என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சாரண - சாரணியர் இயக்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளி கல்வி முன்னாள் இயக்குநர் மணி என்பவரும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் போட்டியிட்டனர்.

இதற்கான தேர்தல் இன்று காலை சென்னையில் உள்ள சாரண, சாரணிய இயக்க அலுவலகத்தில் துவங்கியது.

இந்த நிலையில், சாரண - சாரணியர் தேர்தல் நடைபெறும் மாநில தலைமையகத்தில் ஹெச். ராஜா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த அறிவிப்பும் வராததால் தேர்தலை தொடர்ந்து நடத்துவதாக கூறினார். இதனால் தேர்தல் அதிகாரி மற்றும் ஹெச். ராஜா ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், சாரண - சாரணியர் தேர்தல் பிற்பகல் சுமார் 2 மணியளவில் நிறைவடைந்தது. 

சாரண - சாரணியர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, சாரணர் - சாரணியர் தேர்தல் வாக்குப்பதிவை திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.

சாரண - சாரணியர் தேர்தலை ஏற்க முடியாது என்றும் தேசிய சாரணியர் அமைப்பு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் ஹெச். ராஜா கூறினார்.

சாரணர் இயக்கத்துக்கு சட்டவிரோதமாக தேர்தல் நடைபெற்றுள்ளது என்றும் கடந்த 12 வருடங்களாக சாரண - சாரணியர் இயக்கம் சரியாக செயல்படவில்லை என்றும் ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.