டாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பியும் முன்னாள் முதலாளியம்மாவின் பங்களாவை கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின் கொதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அடிமைகள் கமிஷன் அடிக்கிறார்கள், இவர்கள் மனிதர்களை அடிக்கிறார்கள். சாத்தான்குளம் தந்தை-மகனை போலீஸ் கொன்றதுபோல், தென்காசி வனத்துறையினரால் அணைக்கரை முத்து என்ற விவசாயி மர்மமானமுறையில் இறந்துள்ளார். அனுமதியின்றி மின்வேலி அமைத்த தவறுக்கு தண்டனை உயிர் பறிப்பா?

ஏழைகளிடம் மின்கட்டண கொள்ளை நடத்தியும் டாஸ்மாக் மூலம் கஜானாவை நிரப்பியும் முன்னாள் முதலாளியம்மாவின் பங்களாவை கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது அடிமைக்கூட்டம். 4 மாத கொரோனா ஊரடங்கால் தவிக்கும் சாமானியர்களுக்கு உதவாத அரசுப் பணம், எடுபிடிகளின் அரசியல் லாபத்துக்கு பயன்படுவது வெட்கக்கேடு.

பாஜக மாணவ அமைப்பான ஏபிவிபியின் தலைவர் சுப்பையா சண்முகம், 62 வயது சென்னை பெண்ணிடம் தவறாக நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர் புகாரளித்தும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பது எது? தமிழகத்தில் அட்ரஸே இல்லாமல் இருந்தவர்களை எல்லாம் ஆடவிட்டதே அடிமைகளின் சாதனை’’என அவர் தெரிவித்துள்ளார்.