Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு! டாக்டர் சிகிச்சை.. உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு!

The doctors are being treated for sasikala
The doctors are being treated for sasikala
Author
First Published Mar 28, 2018, 11:55 AM IST


கணவர் மறைவிற்காக சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த சசிகலாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது உறவினர்கள்  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டது. கணவர் மறைந்ததை அடுத்து பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் வெளியே வந்தார். நடராஜனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்.

The doctors are being treated for sasikala

தற்போது தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் சசிகலா தங்கி இருந்து வருகிறார். தஞ்சாவூரை வெளியில் போக கூடாது என்ற பரப்பன ஆக்ராஹார சிறை நிர்வாகம் கூறியதால் அவர் வேறு எங்குமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சசிகலா தங்கியுள்ள வீட்டுக்கு செல்லும் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா நேற்று காலையில் இருந்தே திடீரென சோர்வாக காணப்பட்ட சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என்று டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சசிகலாவை யாருமே சந்திக்கவில்லை.

The doctors are being treated for sasikala

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் டாக்டர், சசிகலாவுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். உடல்நிலையை பரிசோதித்து பார்த்த அவர், சசிகலா நலமுடன் உள்ளார் என்றும், அவரது உடல் சோர்வாக காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் தெரிந்ததும், அவரது சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இருந்து தனது குடும்பத்தினருடன் தஞ்சை வந்து சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதேபோல உறவினர்கள் குவிகிறார்களாம். சசிகலா தங்கியிருக்கும் வீட்டில் உறவினர்கள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios