இந்நிலையில், நாங்குநேரியில் இடைத்தேர்தலின் போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் திமுக- மதிமுக பிரமுகர்கள் என 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக சிலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். நாங்குநேரி, களக்காடு, ஏர்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நாங்குநேரி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வானமாமலை, மதிமுக ஒன்றிய செயலாளர் துரைசாமி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக, மதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.