Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் பலரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்.. அமைச்சர் ஏ.வ. வேலு உத்தரவு.

ஓய்வின்றி  தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்றும் அது தான் அவரின் சிறப்பு என கூறினார். ஒப்பந்தம் போடப்படும் நாளில் முடிக்கப்படும் தேதி குறிப்பிட வேண்டும் என்றும், கால தாமதமின்றி பணிகள் நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் உடனுக்குடன் எனது பார்வைக்கு கொண்டு வர வேண்டும். 

The dmk past leader Kalaiger library in Madurai should be a surprise to many. minister Velu order to officials.
Author
Chennai, First Published Jun 17, 2021, 10:41 AM IST

அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் போடப்படும் நாளில் பணிகளை முடிக்கப்படும் தேதி குறிப்பிட வேண்டும் என்றும் கால தாமதமின்றி பணிகள் முடிக்கப்படுகிறதா என்பதை எனது பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். 

The dmk past leader Kalaiger library in Madurai should be a surprise to many. minister Velu order to officials.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு; நிதித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய 2 துறைகளின் செயல்பாடு மாநில வளர்ச்சிக்கு அவசியம் என்றும் சமூகத்திற்கு சேவை செய்வது தான் நமது முக்கிய இலக்கு என்று முதலமைச்சர் நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார்.

ஓய்வின்றி  தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்றும் அது தான் அவரின் சிறப்பு என கூறினார். ஒப்பந்தம் போடப்படும் நாளில் முடிக்கப்படும் தேதி குறிப்பிட வேண்டும் என்றும், கால தாமதமின்றி பணிகள் நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் உடனுக்குடன் எனது பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகமும் அமைய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The dmk past leader Kalaiger library in Madurai should be a surprise to many. minister Velu order to officials.

பின்னர் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:-

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை, கீ.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைப்பதற்கான மதீப்பீடுகள் வரைபடங்களை விரைந்து வழங்க வேண்டும். அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் இருக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் 12000 ஆக்ஸிஜன் படுக்கைகளை  அமைத்த பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு.11 இடங்களில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை இந்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் எனவும், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios