Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸை கழற்றிவிட முடிவு... மு.க.ஸ்டாலின் போடும் அதிரடி திட்டம்..!

கே.என்.நேரு இதை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதையும் தலைமை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

The decision to dismantle the Congress ... MK Stalin's action plan
Author
Tamil Nadu, First Published Dec 17, 2020, 10:43 AM IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையை அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் ஏற்கெனவே எடுத்து வைத்தனர். கே.என்.நேரு இதை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதையும் தலைமை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.The decision to dismantle the Congress ... MK Stalin's action plan

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இத்தனைக்கும் அக்கட்சி மாநிலத்தில் அதிக இடங்களை அக்கட்சி பெற்றிருந்தது. இந்த நிலை தமிழ்நாட்டில் திமுகவுக்கு வரக்கூடாது என அக்கட்சியினர் நினைக்கின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதாலே திமுக தோல்வியைத் தழுவியது என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் புதுச்சேரி விவகாரம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் 1996 முதல் 2000 வரை திமுக ஆட்சியிலிருந்தது. அதற்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளே ஆட்சியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி மோதல்கள் வலுத்துள்ளன. திமுகவின் ஆதரவு காங்கிரஸ் ஆட்சியமைக்க முக்கியம். நாராயணசாமி திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைத்து அழகு பார்க்கிறார். அவர் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக காங்கிரஸுக்குள்ளேயே வேறு கோஷ்டிகள் வேலைகள் பார்க்கும் என்று கூறப்படுகிறது.

The decision to dismantle the Congress ... MK Stalin's action plan

இந்நிலையில் புதுச்சேரியில் திமுகவை தனித்து போட்டியிடச் செய்தால் அங்கு உறுதியாக வெற்றி பெறலாம் என்கின்றனர் புதுச்சேரி திமுகவினர். மேலும் காங்கிரஸிலிருந்து சில நிர்வாகிகள் திமுக பக்கம் வர தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு மாநிலங்களில் திமுக ஆட்சியிலிருந்தால் தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் கவனம் பெறுவார் என்றும் அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதை மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கையாக வைத்துள்ளனர். இதனால் அவரும் அந்த முடிவுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டி என்று கூறினால் அந்த முடிவு தமிழக கூட்டணியிலும் எதிரொலிக்கும். கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் விரைவில் ஒரு மாற்றம் நிகழும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios