Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்களின் மரணம் மனதை வாட்டுகிறது.. இலங்கை அமைச்சர் நீலிக்கண்ணீர்..

அதற்கான திட்டவரைவொன்றை கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமரிடம் தாம் கையளித்ததாகவும் கடற்றொழில் அமைச்சர் கூறியுள்ளார்.  

The death of Tamil Nadu fishermen is heartbreaking .. Sri Lankan Minister Drama  ..
Author
Chennai, First Published Jan 23, 2021, 12:32 PM IST

தமிழக மீனவர்கள் நான்குபேர் உயிரிழந்திருப்பது கவலையளிப்பதாக இலங்கை அமைச்சர் வேதணை தெரிவித்துள்ளார். இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும் அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

The death of Tamil Nadu fishermen is heartbreaking .. Sri Lankan Minister Drama  ..

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு, இலங்கை மீனவர்களும் இந்திய மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில், இரண்டு தரப்பினரும் இணங்கமான முறையில் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள திட்டம் வகுக்கப்பட வேண்டும்  என்பதை தாம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கான திட்டவரைவொன்றை கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமரிடம் தாம் கையளித்ததாகவும் கடற்றொழில் அமைச்சர் கூறியுள்ளார். எனினும், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட கொவிட்-19 தொற்று காரணமாக அதனை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என  அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

The death of Tamil Nadu fishermen is heartbreaking .. Sri Lankan Minister Drama  ..

துன்பங்களை சுமந்த போதெல்லாம் உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள், தமிழர்களுக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில், உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அறிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios