இலவசம் குறித்த வழக்கில் திமுக முன்வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். 

இலவசம் குறித்த வழக்கில் திமுக முன்வைத்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு:-

தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சிகள் இலவசங்கள் வழங்கப்படுமென தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பதை தடுக்க வேண்டும் என மனுதாரர் முன் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆகவே மனுதாரர் கோரியபடி இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முதலில் இவற்றை இலவசங்கள் என்று சொல்வதே தவறு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நலதிட்டங் வழங்கப்படுகிறது, அதுதான் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு அந்த வாக்குறுதிகளை மக்கள் ஆராய்ந்து அந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள், அந்த தேர்தல் நேரத்தில் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது, அதற்குப் பிறகு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கொள்கையாக மாறுகிறது, பிறகு அந்த கொள்கை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்து அங்கு ஒப்புதல் பெற்ற பிறகுதான் அது திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Ghulam Nabi Azad: அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி கிழித்தபோதே காங்கிரஸ் கதை முடிஞ்சது: குலாம் நபி ஆசாத் குமுறல்

எனவே இதுபோன்ற விஷயங்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்குள் வராது என்பதுதான் எங்களுடைய வாதம், அரசியலமைப்பு சட்டம் 37 directive principle of State Policyயில் நீதிமன்றங்கள் இதில் implement செய்யமுடியாது என தெளிவான அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தடை விதிக்கவும் முடியாது என்பதுதான் எங்கள் வாதம், directive principle of State Policy மக்கள் நலனுக்காக, மக்களின் அபிவிருத்திக்காக, கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக கருதப்படும்.

executive, Judiciary, legislative என்ற 3 துறையும் அவரவர்கள் அதிகாரத்துக்குட்பட்டு அவர்கள் செயல்பட வேண்டும், இதில் யாருக்குள் யாரும் தலையிட முடியாது, ஆனால் இது தொடர்பான வாதம் இது ஒரு கட்டத்தில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படுகிற வாக்குறுதிகளை ஒரு கண்காணிப்பு குழு பார்வையிட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வாதம் வைக்கப்பட்டது, அதற்கும் நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம், தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு அரசியல் கட்சிக்கு பேச்சுரிமையாகும், தேர்தல் வாக்குறுதிகளை பேச்சுரிமை அடிப்படையில் அவர்கள் மக்கள் முன் வைக்கிறார்கள், இதில் நீதிமன்றமோ அல்லது அதிகாரிகள் அடங்கிய குழுவோ ஆராய முடியாது.

இதையும் படியுங்கள்: 39 தொகுதிகளையும் தட்டி தூக்குறோம்... அதிக வாக்கு கோவை, பொள்ளாச்சி, நிலகிரி ...மார்தட்டும் செந்தில் பாலாஜி

article 19 (1 a) இந்த உரிமை அரசியல் அமைப்பு சட்டத்தில் வருகிறது, எனவே இதை ஒரு பராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தினால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும், நீதிமன்றங்களால் தடை செய்ய முடியாது, எனவே இது போல தேர்தல் வாக்குறுதிகளை தரக்கூடாது என நீதி மன்றத்தால் சொல்ல முடியாது, அதை ஆராய்வதற்காக அமைக்கப்படும் அதிகாரிகளும் அதை ஆராய முடியாது என்பது தான் எங்களின் வாதம், எங்களுடைய வாதம் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது, directive principle of State Policy எதிராக உத்தரவுகள் வரக்கூடாது என நாங்கள் கூறும் போது அதை அவர்கள் ஏற்கிறோம் என கூறியுள்ளனர்.

இதேபோல் செய்யமுடியாத, நடைமுறைக்கு ஒத்துவராத சில வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை கேலிக்கூத்தாக்கும் வகையில் வாக்குறுதிகள் இருக்கக் கூடாது என்பததால்தான் நாங்கள் இதை கூறுகிறோம் என அவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர், முன்னதாக ஒரு தேர்தல் வாக்குறுதி என்பது மக்களை மோசடி செய்யும் ஒரு யுக்தி, அது மக்களை விலைக்கு வாங்கும் ஒன்றாகவே பார்ப்பதாக ஏற்கவே சிவசுப்பிரமணியம் என்பவரின் வழக்கில் அதெல்லாம் அப்படி வராது என்றும் இவற்றிலெல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஏற்கனவே நீதி மன்ற உத்தரவுகள் உள்ளது. 

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க முடியுமா, வாக்குறுதிகளை ஆராய கமிட்டி அமைக்கலாமா என்ற கேள்விகளை முன்வைத்து அது தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதில் திராவிட முன்னேற்றக் கழகம் தகுந்த நேரத்தில் நீதிமன்றத்திற்கு சென்று உச்சநீதிமன்றத்தில் directive principle of State Policy யில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதை எடுத்துறைத்ததன் விளைவாக, இலவசங்களுக்கு தடை என்ற வழக்கில் எந்தவிதமான தடை உத்தரவையும் நீதிமன்றம் வழங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.