முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.

எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே டிடிவிக்கு ஆதரவாகவும், தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே 60 நாட்கள் கெடு விதித்திருந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என தெரிவித்துள்ளதால் எடப்பாடி தரப்பு ஆடிபோய் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அடுத்தகட்ட பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை டிடிவி ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வனும், தளவாய் சுந்தரமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.