இதை முன்பே கூறியிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது! இந்த விஷயத்தை திசை திருப்பவே இலக்கா மாற்றம்! ஆர்.பி.!
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை 4 மாதத்தில் தருவதாக சொன்னார்கள். நிதியமைச்சர் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக சொன்னார்கள். இப்போது அவரையே மாற்றிவிட்டார்கள்.
மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதும். ஆனால், தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு முரணாக உள்ளது என ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்;- எடப்பாடி பழனிச்சாமி தன்னை பொதுச் செயலாளர் ஆக்குங்கள் என்று யாரிடமும் சென்று கேட்கவில்லை. அவரை பொதுச் செயலாளராக ஒன்றரை கோடி தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அவரை பொதுச் செயலாளராக நியமித்தனர். சட்டமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என்று கூறிவிட்டார்கள்.
இதையும் படிங்க;- காங்கிரஸ் ஆட்சிக்கு கல்லறை கட்டியவர்கள் தமிழக மக்கள்! திருந்தி உங்களை திருத்தி கொள்ளுங்கள்!திமுவுக்கு வார்னிங்
திமுக இந்த 2 ஆண்டுகளில் தோல்வி அடைந்தது தோல்வி அடைந்தது தான். தோல்வி அடைந்த காரணத்தால் எத்தனை முறை அமைச்சரவையை மாற்றினாலும் பலன் அளிக்காது. திமுக அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல் ஆடியோ பேச்சை மறைப்பதற்காகவே பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி மாற்றப்பட்டுள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது. பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை 4 மாதத்தில் தருவதாக சொன்னார்கள். நிதியமைச்சர் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக சொன்னார்கள். இப்போது அவரையே மாற்றிவிட்டார்கள்.
இதையும் படிங்க;- முதல்வரின் வெளிநாட்டு பயணம் முதலீட்டை ஈர்க்கவா.? தன்னுடைய முதலீட்டை கொடுக்கவா? கேள்வி கேட்கும் ஆர்பி உதயகுமார்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த ரூ.1000 தகுதியுடைய பெண்களுக்கு மட்டும் தான் என்று கூறியிருந்தால் திமுக தேர்தலில் வெற்றி பெற்றிருக்காது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதும். ஆனால், தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு முரணாக உள்ளது.