Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி பிறந்த நாளில் நெகிழ வைத்த தந்தையை இழந்த சிறுவன்... கண்கலங்கிப்போன உடன்பிறப்புகள்..!

கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அரங்கேறிய ஒரு சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The boy who lost his father who made Karunanidhi move on his birthday ... blindfolded siblings ..!
Author
Tamil Nadu, First Published Jun 4, 2021, 5:22 PM IST

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றது. சென்னை சாலிகிராமம் பகுதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அரங்கேறிய ஒரு சம்பவம் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.The boy who lost his father who made Karunanidhi move on his birthday ... blindfolded siblings ..!

கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் அவரவர் இருப்பிடத்தில் இருந்தே எளிமையாக கொண்டாடினர். கொரோனா நிதியாக பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் சைக்கிள், பொம்மைகள் வாங்க சிறிது சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த காசுகளையும் கொண்டு வந்து கொரோனா நிதியாக மலழைப்பருவம் மாறதம் சிறுமி- சிறியவர்களும் கொடுத்து வருவது நெகிழ்ச்சியடைய வைத்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் சாலிகிராமம் பகுதியில் நடைபெற்றது. அப்போது அன்னதானமும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் புகுந்த ஒரு சிறுமியும், சிறுவனும் உண்டியலுடன் விழா ஏற்பாட்டாளர்களை சந்தித்தனர். The boy who lost his father who made Karunanidhi move on his birthday ... blindfolded siblings ..!

அதில் விஸ்வா என்கிற சிறுவனின் பின்னணி குறித்து தெரிந்து கொண்ட திமுகவினர் நெகிழந்து போயினர். ‘’என் பெயர் விஸ்வா. எங்கள் சொந்த ஊர் கன்னியாகுமரி அருகில் உள்ள கொட்டாரம். அங்குள்ள விவேகானந்தா கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நானும் எங்க அண்ணனும் படிக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்க அப்பா திடீரென இறந்து விட்டார். எங்களுக்கு அங்கு ஆதரவாக யாரும் இல்லாததால் கஷ்டப்படுகிறோம். நாங்கள் இருவரும் சிறுவர்கள் என்பதால் அம்மா மட்டும் ஜவுளிக்கடைக்கு ரூ, 3 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.

"

கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்மாவுக்கு சத்துணவு துறையில் வேலைகேட்டு பல முயற்சிகள் எடுத்தோம். ஆனால் கிடைக்கவில்லை. எங்கள் சொந்தக்காரர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியல் போட்டு வைத்திருந்தேன். மக்கள் இப்போது அனைவரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனை மனதில் கொண்டு இந்த சிறிய அளவிலான உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக கொடுக்க வந்தேன். முதல்வர் அவர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து எனது அம்மாவுக்கு சத்துணவு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் நாங்கள் நன்றாக இருப்போம். எங்கள் பெரியப்பா வீடு சாலிகிராமம் பகுதியில் இருக்கிறது. அங்கு அடிக்கடி வந்து செல்வோம். இப்போது அங்கிருந்து தான் வருகிறேன்’’ என அந்த சிறுவன் கண்ணீருடன் பேசியதை கேட்ட அங்கிருந்தவர்கள் கலங்கிப்போயினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios