Asianet News TamilAsianet News Tamil

குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி ஸ்டாலின் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டார்..! கிண்டல் செய்யும் பாஜக

ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து  குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டதாக நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். 

The BJP has criticized the Dravidian model as the epitome of bribery corruption and irregularities
Author
First Published Jul 10, 2023, 8:54 AM IST

ஆளுநர்-முதலமைச்சர் மோதல்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்து வெளியிட்ட உத்தரவு தமிழக அரசியல் கட்சிகளை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர வைத்தது. இந்தநிலையில் தான் ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து 19 பக்க கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வகுப்புவாத வெறுப்பை தூண்டி, மாநில அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் தகுதியானவர் என கூறியுள்ளார். 

The BJP has criticized the Dravidian model as the epitome of bribery corruption and irregularities

ஆளுநர் பதவிக்கு தகுதியில்லை

மேலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ‘தமிழகம்’ என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று, ஏற்க இயலாத, அதிர்ச்சி அளிக்கும் கருத்தை தெரிவித்தார். இதில் இருந்து, அவர் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழகம், தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு மீது ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது. எனபன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளார். இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவினர் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.   இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல, அறியாமையில் கூறப்பட்டுள்ளதும் ஆகும்" - 

 

வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்களே

குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்களே ஸ்டாலின் அவர்களே! திராவிட அரசியல் என்றால் என்ன? என்று முதலில் தெளிவாக, விரிவாக குடியரசுத்தலைவருக்கு  விளக்கி விட்டு பின்னர் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கலாம்.   குடியரசு தலைவர், ஆ ளுநர் ரவியிடமே, 'திராவிட மாடல்  அரசியல் என்றால் என்ன'? என்று கேட்க போகிறார். லஞ்சம், ஊழல்,முறைகேடுகளின் மொத்த உருவம் தான் திராவிட மாடல் அரசு என்ற தெளிவான விளக்கத்தை, ஆதாரங்களோடு அளிக்க போகிறார் ஆளுநர். இது தேவையா? வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்களே  ஸ்டாலின் அவர்களே? என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் நெருக்கடி.!ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆர்.என்.ரவி.!-காங்கிரஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios