கமலுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எப்போதோ வெளியிட்ட ஆடியோ இப்போது வைரலாகி அப்செட் ஆக்கி வருகிறது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் வேட்பாளராக எபிநேசரை கமல் நிறுத்தியுள்ளார். திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். ன் தேசம் என் உரிமை கட்சி ஒருகிணைப்பாளராக இருந்த சமயத்தில் கமலை கடுமையாக விமர்சித்த வாங்கிய ஆடியோவை, பாஜகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் இப்போது வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார்கள். 

அந்த ஆடியோவில் ‘இன்று அரசியல் ஆதாயத்திற்காக முதல்வர் ஆக நடிகர்கள் கமல், ரஜினி இருவரும் வருகின்றனர். ஜெயலலிதா, கலைஞர் இல்லை. இதனால் தமிழகத்தில் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதால் அரசியலுக்கு வருகின்றனர். சிவாஜி படம் போன்றுதான் அரசியல் என்று நினைக்கின்றனர். பதவி ஆசை கமலுக்கும் வந்துள்ளது. நமது இந்தியாவின் நிலைமை வெயிலில், பனியில் எல்லையில் உள்ள மில்டிரி ஆபீசர், கடைசியில் வாட்ச் மேனாக உட்காருகின்றனர்.

 

ஆனால் இளமையில் நடித்து குடும்பத்திற்கு சேர்த்து வைத்துவிட்டு ரிட்டயர்மென்ட் ஆகிற வயதில் நாட்டை காப்பாற்றப் போகிறோம் என்று வருகின்ற நடிகர்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றெல்லாம் பேசு இருந்தார். அந்த ஆடியோ, வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதில் உள்கட்சி சதி இருப்பது கூடுதல் தகவல். காரணம் கன்னியாகுமரியில் பலரும் சீட் கேட்டிருந்த நிலையில் எபிநேசருக்கு அந்த வாய்ப்பை கமல் கொடுத்து விட்டார். இப்போது அந்த ஆடியொவை வைத்தே ஆட்டம் காட்டத்தொடங்கி உள்ளனர் ஆழ்வார்பேட்டை கட்சி நிர்வாகிகள்.