பிறந்தநாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸை அவரது சமூகத்தை சார்ந்த வெளிநாடுகளில் நல்ல பதவியில் இருக்கக்கூடியவர்கள் பாராட்டி வீடியோ வெளியிட்டு ராமதாஸை திக்குமுக்காட வைத்துள்ளனர். 

தமிழகத்தில் வட மாநிலங்களில் குக்கிராமங்களில் வசித்து ராமதாஸ் பெற்றுத்தந்த 20 சதவிகித இட ஒதுக்கீட்டால் படித்து இன்று வெளிநாடுகளில் மருத்துவர்களாக, பொறியாளர்களாக நல்ல நிலையில் வசித்து வருபவர்களை ஒன்றிணைத்து ராமதாஸ் பிறந்த நாளில் இந்த வீடியோவை பிரபாகரன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

அதில்,’’வன்னியர்களாகிய நாங்கள் மருத்துவர் ராமதாஸ் ஐயாவுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகின்றோம். அய்யா அவர்கள் பிறந்தநாளில் அவர் பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டால் நம் வாழ்க்கை உயர்கிறது. 1987 ல் ராமதாஸ் அய்யா இந்த ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தார்.

’’இங்கு போராடி இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள். அதனால் நான் இன்ஜினியராக அமெரிக்காவில் இருக்கிறேன். எனது தம்பி மருத்துவராக இருக்கிறார். கல்வியில் முன்னின்று போராடி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தீர்கள். அதன் பலனாக நான் இன்று அமெரிக்காவில் இருக்கிறேன் தம்பி ஊருக்கு மருத்துவராக இருக்கிறார் என்னைப் போன்ற எண்ணற்ற ஏழைகளின் பொருளாதாரம் பிரிவதற்கு கல்வி கொடுத்து முன்னிட்டு இருக்கிறீர்கள் உங்கள் பங்கு அளப்பரியது. 

எங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு முக்கியமாக பங்காற்றியிருக்கிறது. ஒரு சிறிய விவசாய குடும்பத்தில் பிறந்தேன். இன்று அமெரிக்காவில் பெரிய பணியில் இருக்கிறேன். இதில் எனது தந்தைக்கு தாய்க்கும் ஆசிரியர்களுக்கும் எந்தளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு உங்களுக்கும் பங்கிருக்கிறது. நீங்கள் வாங்கி கொடுத்து இட ஒதுக்கீட்டின் மூலம் படித்தவன். அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும். என்னை போல லட்சக்கணக்கானவர்களை படிக்க வைத்தீர்கள்.நீங்கள் இருக்கும்போது நான் இருப்பதும் உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் எனக்கு பெருமை.

 வசதிக்கு எனக்கு உண்டு. வம்பு வேண்டாம் என்றில்லாது வெளியூர்களில் வறுமையைப் போக்க வந்த வரலாறே. அறிவில் இமயமலை. போராட்டத்தில்  எரிமலை. அன்பில் குளிர் மழை. எம்பிசி இட ஒதுக்கீடு பயனாளி முதல் தலைமுறை மருத்துவர் கடலூர் அமெரிக்காவிலிருந்து வாழ்த்துகிறோம்'’ என பலரும் அந்த வீடியோவில்  ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ராமதாஸ் அகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.