காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போதிய நெருக்கடியை மத்திய அரசுக்கு அதிமுக கொடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, பரங்கிமலையில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து வகையில் மத்திய அரசுக்கு, அதிமுக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது என்றார். மும்முனை நெருக்கடியை மத்திய அரசுக்கு அதிமுக அரசு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது ஒரே நிலைப்பாடு. அதனை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தமிழக மக்களின் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறினார்.