வேலூர் தொகுதியில் வெற்றி பெறும் நோக்கில் அதிமுக 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வேலூர் மக்களை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.சி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் வருகிற 22-ம் தேதி காலை முதல் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குடியாத்தம் தொகுதிக்கு வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி ஆகியோரும், வேலூர் தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன்
கே.வி.குப்பம் தொகுதிக்கு அமைச்சர் வேலுமணி, அணைக்கட்டு தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்’’ என அவர் கூறினார். சுமார் 71 பேரை கொண்ட குழுவை திமுக நியமித்த நிலையில் அதை விட 2 மடங்கு கூடுதலாக அதிமுக நியமித்துள்ளது.