மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம் பாலுக்கும் தயாநிதிக்கும், தொடர்ந்து போட்டி நிலவி வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

நாடு முழுவதும், 7 கட்டமாக நடந்து முடிந்தது. தமிழ் நாட்டில் உள்ள 22 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18  ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, திமுக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 10 இடங்களில் முன்னனிலையில் உள்ளது. 

இந்நிலையில், திமுக சார்பில், மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதிமாறன் முன்னிலையில் உள்ளார். இதை தொடந்து திமுக தொண்டர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்திய சென்னை பகுதியில் முன்னணியில் உள்ளது மகிழ்ச்சி என்றும், கண்டிப்பாக பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்று தளபதி ஸ்டாலினுக்கு மக்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என பேசினார்.