தந்தை பெரியாரின் 144 -வது பிறந்த நாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் நாளை சமூக நீதி நாள் ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து, அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!
இதையும் படிங்க;- ”பெரியாரின் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!
அதேபோல இந்த ஆண்டும் தமிழக அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று சமூகநீதி நாளாக ததமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். அவருடன் துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி, கே.என்.நேரு, ஆ.ராஜா உள்ளிட்ட கட்சி மற்றும் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.