”பெரியார் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!

சமூக சீர்திருத்தவாதியான பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாரின் எழுத்துகள், கருத்துகள், தத்துவங்கள் குறித்து திரும்பி பார்ப்போம்..
 

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

பொரியாரின் பொன்மொழிகள்: 

* சிந்திப்பவன் மனிதன்
  சிந்திக்க மறுப்பவன் மதவாதி
  சிந்திக்காதவான் மிருகம்
  சிந்திக்க பயப்படுகிறவன் கோழை

*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும்

* மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்

* நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்
 
*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.

*நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

*கல்வி அறிவும்,சுயமரியாதை எண்ணமும்,பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்

*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.!

*சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்

* ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

* நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.

* எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.

*கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.

* சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.

* முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான்  ஜனநாயகம்.

* எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது

*  கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.

 * நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

* கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.

* உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.

* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

* ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

* பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும்

*தொடர்ந்து கற்றுக்கொள்,

  ஆய்வு செய்

   உருமாறு.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios