Asianet News TamilAsianet News Tamil

எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

thanthai periyar birthday as social justice day aka samooga needhi naal
Author
First Published Sep 16, 2022, 6:05 PM IST

இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

கடந்த ஆண்டு பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் கொண்டாடப்படவிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் சமூக நீதிப் பார்வை குறித்து மறுவாசிப்புக்கான தேவை எழுந்துள்ளது.

thanthai periyar birthday as social justice day aka samooga needhi naal

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூக பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவர். இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அழைக்கப்படுகிறார்.  சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பிறகே, இந்திய அரசியல் வெளியில் சமூக நீதி என்ற வார்த்தைகள் பரவலாகப் புழங்க ஆரம்பித்தன.  

பிற்பட்டோர் நலன் குறித்த விவாதங்கள் அந்த வார்த்தையைத் தவிர்த்து முழுமை பெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சமூக நீதி என்பது இடஒதுக்கீட்டுக்குள் அடங்கிவிடுவதன்று. அது அனைவரையுமே உள்ளடக்கிய சமத்துவ நிலையை இலக்காகக் கொண்டது. அதன் முழுமையான பரிமாணத்தை நூறாண்டுகளுக்கு முன்பே தெளிவாக உணர்ந்திருந்தவர் பெரியார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த இருபதுகளின் தொடக்கத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், அங்கேயே வகுப்புவாரி உரிமைப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டிருந்தார். 1920-ல் திருநெல்வேலியில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டில், பெரியார் தலைமையில் முன்மொழியப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை மாநாட்டுத் தலைவர் எஸ்.சீனிவாசய்யங்கார் ஏற்றுக்கொள்ளவில்லை. 

மேலும் செய்திகளுக்கு..குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்

thanthai periyar birthday as social justice day aka samooga needhi naal

திருநெல்வேலியை அடுத்து தஞ்சை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாநாடுகளிலும் அத்தீர்மானத்தை நிறைவேற்று வதற்கான பெரியாரின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன. இதற்கிடையில், முக்கியப் பாதைகளில் அனைவரும் நடந்துசெல்லும் உரிமைக்கான வைக்கம் போராட்டத்திலும் சமபந்தி உரிமைக்கான சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்திலும் பெரியார் தீவிரமாகப் பங்கேற்றார். அவரது சமூக நீதி இங்கிருந்தே தொடங்குகிறது. 

சமூக நீதி என்பது இடஒதுக்கீட்டுக்குள் அடங்கிவிடுவதன்று. அது அனைவரையுமே உள்ளடக்கிய சமத்துவ நிலையை இலக்காகக் கொண்டது. அதன் முழுமையான பரிமாணத்தை நூறாண்டுகளுக்கு முன்பே தெளிவாக உணர்ந்திருந்தவர் பெரியார். சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப் பற்று, மனிதாபிமானம் ஆகிய வாசகங்கள் பெரியாரால் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டவை தான். 

சாதிபேதம் ஒழிவதாலும், மேல்சாதி கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப்போகுமானால் சுயராஜ்ஜியம் வருவது தடைபட்டுப் போனால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய் போவதே மேல் என்கிறார் பெரியார். சாதி, மதம் பேதமில்லாமல் அனைவரும் பகுத்தறிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்கிறார் பெரியார்.

மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

Follow Us:
Download App:
  • android
  • ios