தஞ்சாவூர் TO தேவர் குருபூஜை.. தென் மாவட்டங்களில் சசிகலா செய்யப்போகும் தரமான சம்பவம்.. பதற்றத்தில் எடப்பாடி.
28ஆம் தேதி திருநெல்வேலியில் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார், 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கும் அவர், 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்.
அதிரடியாக மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள சசிகலா அடுத்த ஒரு வார காலம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது தனது ஆதரவாளர்களையும் அதிமுக மீது அதிருப்தியல் உள்ளவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
சிறையில் இருந்து வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீடீரென சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். ஆனால் அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இனியும் அதிமுக சீரழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முழங்கிய சசிகலா, அதிமுகவில் இணைவதற்கான பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலையான நான்கரை மாத காலத்திற்கு பின்னர் ஜெயலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர், மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மா நினைவிடத்தில் இறக்கிவைத்து விட்டதாகவும், கட்சிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அம்மாவிடம் கூறிவிட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்ததுடன், அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் செல்வதாக கூறினார்.
இதையும் படியுங்கள்: ஒட்டுமொத்த உலக நாடுகளையும் வாயடைக்க செய்த இந்தியா.. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.
அதைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி அதிமுக பொன்விழா தினத்தன்று தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை அவர் ஏற்றி வைத்தார். அவரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை பதற்றம் அடைய செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தென்மாவட்டங்களில் ஒருவார கால சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக அதிரடியாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 26 ஆம் தேதி தஞ்சாவூர் செல்ல உள்ள அவர், 27ஆம் தேதி டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார், 28ஆம் தேதி திருநெல்வேலியில் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார், 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கும் அவர், 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்.
இதையும் படியுங்கள்: சசிகலாவும் ஸ்டாலினும் கை கோர்த்துட்டாங்க.. அதிமுகவை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. கதறிய ஜெயக்குமார்.
பின்னர் 1ஆம் தேதி தஞ்சாவூரில் தொண்டர்களுடனும், ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது தனது ஆதரவாளர்களையும், அதிமுகவின் அதிர்ச்சியில் உள்ளவர்களையும் சசிகலா சந்தித்து உரையாட உள்ளார். சசிகலா மீது புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கையில் எடப்பாடிபழனிசாமி தரப்பு இறங்கியுள்ள நிலையில், சசிகலா தனது செல்வாக்கை நிரூபிக்க தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் மற்றும் பொன்விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்தது போலவே, அவர் தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்திலும் டிடிவி தலைகாட்ட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.