ஒட்டுமொத்த உலக நாடுகளையும் வாயடைக்க செய்த இந்தியா.. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.

இந்த வைரஸை தடுக்க ஒரே வழி தடுப்புசிதான் என்பதை உணர்ந்த விஞ்ஞானிகள், தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தீவிர ஆராய்ச்சிக்குப்  பின்னர் மக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது. 

India has silenced the entire world ..  india achieved ..100 crore corona vaccine record.

நூறு கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தடுப்பூசி அதிகம் செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பியா நாடுகிள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முதல் அலை, இரண்டாவது அலை என அடுத்தடுத்து வைரஸ் தாக்கியதால், ஏராளமான உயிர்கள் பறி கொடுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரமே அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது இதில் சீனா மட்டும் விதிவிலக்காக இருந்து வருகிறது. 

India has silenced the entire world ..  india achieved ..100 crore corona vaccine record.

இதையும் படியுங்கள்: ராஜபக்சே மகனுக்கு உ.பியில் விருந்து.. இது பாஜகவின் ஈனத்தனமான செயல்.. டார் டாராக கிழித்த சீமான்.

இந்த வைரஸை தடுக்க ஒரே வழி தடுப்புசிதான் என்பதை உணர்ந்த விஞ்ஞானிகள், தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தீவிர ஆராய்ச்சிக்குப்  பின்னர் மக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கோவி ஷீல்ட், கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு அது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஒன்பது மாதங்களில் 100 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி செலுத்தியதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 

India has silenced the entire world ..  india achieved ..100 crore corona vaccine record.

இதையும் படியுங்கள்:  அதிமுக தொண்டர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி. காலையிலேயே பரபரப்பு.!!

அதேபோல் மக்கள் தொகை அடிப்படையில் அதிக அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 5 கோடிக்குமேல் கொரோனா தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படுவது பெரும் சவால்தான் இதை இந்தியா எப்படி செய்து முடிக்கப்போகிறதோ என பல உலக நாடுகள் கூறிவந்த நிலையில், அந்த விமர்சனங்களை எல்லாம் முறியடித்து. இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அனைத்து நாடுகளையும் வாயடைக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios