Asianet News TamilAsianet News Tamil

நிவாரணம் கொடுத்தா மட்டும் போதாது.. இதையும் செய்யுங்க.. ஸ்டாலின் அரசுக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை.!

இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Thanjavur Temple Chariot Tragedy: TTV.Dhinakaran request to Stalin government
Author
Thanjavur, First Published Apr 27, 2022, 2:20 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு டிடிவி.தினகரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தேர் விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Thanjavur Temple Chariot Tragedy: TTV.Dhinakaran request to Stalin government

டிடிவி.தினகரன் இரங்கல்

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

Thanjavur Temple Chariot Tragedy: TTV.Dhinakaran request to Stalin government

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிராத்திக்கிறேன். இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

Thanjavur Temple Chariot Tragedy: TTV.Dhinakaran request to Stalin government

முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios