Thangamani said Copper stagnation has been caused by closure of the sterile plant

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்

சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி திடீரென மின்வெட்டு ஏற்படுவதாகவும், திருவொற்றியூர் பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானதாகவும் திமுக உறுப்பினர் கே.பி.பி சாமி பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு பழுதடைந்த மின்மாற்றிகளை சரி செய்ய தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அமைச்சர் திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலை துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே அதன் காரணமாகத்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு தாமதமாக தான் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.

அதே வேளையில் மாற்று வழி மூலம் டிரான்ஸ்பார்மர்கள் தயார் செய்யப்பட்டு பழுதடைந்தவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.