அரசியல் செய்வதற்கு காரணங்கள் இல்லாததால் மு.க. ஸ்டாலின் தேவையற்ற புகார்களை கூறி வருகிறார் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சூளையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் தங்கமணி இன்று பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரவித்தார். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால், அவர் தேவையற்ற புகார்களைக் கூறி வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.