இபிஎஸ் பானியில் நாங்கள் பேசத் தொடங்கினால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது!எச்சரிக்கும் தங்கம் தென்னரசு

அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க - முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கைத் திசைதிருப்பும் வகையில் தொழில்முதலீடு பெற்று. வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உருவாக்கச் சென்றுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புவதற்கு தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Thangam thennarasu has condemned Edappadi for criticizing the Chief Minister foreign trip

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் சுற்றுலா பயணம் சென்றுள்ளதாகவும், தங்களது பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில்,  "முதலிட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?" என்று

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும்எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி திரு. பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவணங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. 

Thangam thennarasu has condemned Edappadi for criticizing the Chief Minister foreign trip

பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொந்தரவு

முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு அரைவேக்காட்டுப் புகார் கொடுக்கிறார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக் கொண்டு இருந்தவர் பழனிசாமி; அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டர்வைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிவிட்டு. நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் திரு. பழனிசாமி;

தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் இந்தப் பழனிச்சாமி என்பதுதான் வரலாறு.  இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப. தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க "பேரணி" "புகார்" "அறிக்கை" என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

Thangam thennarasu has condemned Edappadi for criticizing the Chief Minister foreign trip

இபிஎஸ் மகன் வெளிநாடு சென்றது ஏன்.?

"முதலீடு" என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிச்சாமி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் மாண்புமிகு முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அவலாக கக்குகிறது.

13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் "சுற்றுலா" சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா?

Thangam thennarasu has condemned Edappadi for criticizing the Chief Minister foreign trip

ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது

இப்போது இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல, திரு. பழனிசாமியின் ஊழல் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றப் படிக்கட்டுகளை எண்ண வேண்டியவர்கள். தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எடப்பாடி திரு. பழனிசாமி பாணியிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா.! மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த எதிர்கட்சிகள்.. திமுகவும் அதிரடி அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios