அதிமுகவில் இணைவதற்கான முயற்சியை, தங்க தமிழ்செல்வன் செய்து கொண்டிருப்பதாக மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளது, அமமுகவுக்குள் சலசலப்பை எற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இந்த பேச்சு தொடர்பாக, தங்க தமிழ்செல்வனிடம், பிரபல வெப்சைட் ஒன்று கேள்வி எழுப்பி இருந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்வது உண்மையா? என்று தங்க தமிழ்செல்வனிடம் கேள்வி எழுப்பியதற்கு, தண்ணியில்லாத கணறு ஒன்று உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக சென்றால் விழுந்து விடுவாய் என்று சொல்கிறார்கள். விளக்கைப் பிடித்துக் கொண்டுபோய் எவனாவது அந்த கிணற்றில் விழுவானா? என்று கேள்வி எழுப்பினார்

.

மேலும் தொடர்ந்த அவர், நான் கேட்ட கேள்வி இதுதான். அனைத்து தொகுதிகளிலும், ஜெயிப்போம் என்று அமைச்சர்கள் பேசுகிறார்கள். எங்களிடம் பணம் இல்லை. தொண்டர்கள் செல்வாக்கு இல்லை. பண பலம் இல்லை. உங்களுக்கு சவால் விடுகிறேன். திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெற போகிறது. 

நடக்கத்தான் போகிறது. நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, அதிமுகவில் உள்ள 15 காரியக்காரர்கள் விலக்கி விட்டு கட்சியையும் ஆட்சியையும் விட்டு விட்டு விலக வேண்டும். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்து இணைந்து விடுகிறோம் என்று கூறினேன். இதற்கு முட்டாள்தனமாக பதில் சொல்லக்கூடாது. 

நான் தூது செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது. ஒன்று மட்டும் தெரிகிறது. ஆளும் கட்சிக்காரர்களுக்கு தலைக்கணம் உச்சியில் நின்று கொண்டிருக்கிறத என்றார்.எம்.எல்.ஏ. வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறதே? என்றதற்கு நல்ல தீர்ப்பாக வரும் என எதிர்பார்க்கிறோம். 

அப்போது தமிழ்நாட்டையே புரட்டிப்போடக் கூடிய சம்பவங்களும் நடக்கும். அதிமுகவில் இருக்கும் 10, 15 தலைகளை வெளியேற்றினால் போதும் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வந்து விடுவோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.