“இஸ்லாமிய சிறைக்கைதிகளின் விடுதலைக்காக ஒரே மேடையில் அணி வகுத்த பாமக, விசிக, தவாக”.. அதிரடி காட்டிய அன்சாரி.!

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று செப்டம்பர் 10 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் தடையை மீறி நடைபெற்றது.

thamimun ansari who formed a pmk vck tvk parties of islamic prisoners release

பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு துணைத்தலைவர் S.S.பாலாஜி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ராம்முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகையை கொடி அசைத்து அற்புதம்மாள் தொடங்கி வைத்தார். முற்றுகையில் திரளான பெண்கள் கைக்குழந்தைகளுடன் அணி வகுத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் மதியம் 3 மணி முதல் குழுமத் தொடங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் என நூற்றுக்கணக்காண வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியப்படி அணிவகுத்தனர்.

thamimun ansari who formed a pmk vck tvk parties of islamic prisoners release

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

போராட்டப் பகுதியை சுற்றிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் நெரிசலால் திணறியது. ஒரு கட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் திரண்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாமல் போலீசார்கள் திணறினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியோடு தடையை மீறி திரண்டு கோஷங்களை முழங்கியது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. கூட்டம் தடுப்பை உடைத்து முன்னேற அந்த பெரிய வளாகம் முழுக்க மக்கள் எழுச்சியோடு அலைபாய்ந்தனர்.

பிறகு முற்றுகை அணிவகுப்பை அற்புதம்மாள் அவர்கள் கொடியசைத்து தொடங்க, தலைவர்கள் முன்னிலை வகுக்க, அணி வகுப்பு கம்பீரமாய், வீதிகள் அலற நகர்ந்து. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வந்ததும், அனைவரும் தடுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். ராஜரத்னம் ஸ்டேடியம் மக்களால் நிரம்பி வழியே, அங்கு உரைகளும், முழக்கங்களும் விண்ணதிர எழுந்த வண்ணமிருந்தது. பெண்கள் கைக்குழந்தைகளுடன் திரண்டிருந்ததும், மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் அணிவகுத்து பலராலும் பாராட்டப்பட்டது.

thamimun ansari who formed a pmk vck tvk parties of islamic prisoners release

கடந்த ஒரு மாதமாக தமிழகமெங்கும் மஜகவினர் முன்னெடுத்த பரப்புரைகளும், விளம்பரங்களும் தமிழகம் எங்கும் மக்களை திரட்டி வர செய்திருக்கிறது. பல வடிவ விளம்பர யுக்திகள் மூலம் இக்கோரிக்கையை 2 கோடிக்கும் அதிகமான மக்களிடம் மஜக வினர் கொண்டு சேர்த்துள்ளனர். இது இக்கோரிக்கையை மக்கள் மயப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் போராட்டம் இது தான் என பலரும்  பாராட்டினர்.

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன்ரஷீத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.இணை பொதுச்செயலாளரும், தலைமை போராட்ட குழுவின் தலைவருமான ஜே.எஸ். ரிபாயி அவர்கள் முழக்கங்களை தொடங்கி வைத்தார். துணைப்பொதுச் செயலாளர் சையத் முகமது ஃபாருக் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

thamimun ansari who formed a pmk vck tvk parties of islamic prisoners release

இதில் செ.ஹைதர் அலி, தாவுத் மியா கான், அத்திக்குர் ரஹ்மான், ஷேக் மொய்தீன், தடா ரஹீம், தர்வேஷ் ரஷாதி, அப்பலோ ஹனீபா, R.K.ஜலீல், லத்திபுல்லாஹ், அகில பாரத சோழ ராஜ்ய கட்சி தலைவர் அம்பி வெங்கடேசன், தமிழக இளைஞர், மாணவர் இயக்க தலைவர்  MMR.மதன், திராவிடர் விடுதலை கழக சென்னை பொறுப்பாளர் தவசி, ஆகியோரும் முற்றுகை போராட்டத்தில் முன்னிலை வகுத்தனர்.  காவல் தடையை உடைத்து மஜகவினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அணிவகுத்தது பெரும் பரபரப்பை அண்ணாசாலை வரை ஏற்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios