Asianet News TamilAsianet News Tamil

பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் காலமானார். உலகில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத்.

Charles becomes King and makes emotional speech
Author
First Published Sep 10, 2022, 6:26 PM IST

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். 

இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.  ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னரானார். மூன்றாம் சார்லஸ் என பிரிட்டனின் மன்னர் இனி அழைக்கப்படுவார். 

Charles becomes King and makes emotional speech

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக இன்று அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டார். இதனையடுத்து பிரிட்டன் மரபுகளின் படி குண்டுகள் முழங்க மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சபை ஆர்ச்பிஷப் ஜஸ்டின், பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.   

மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். 

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது பேசிய அவர், 'என் தாயார் இரண்டாம் எலிசபெத் மறைவின் துயரை உங்களுடன் பகிர்கிறேன். 70 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளுடன் தொடர்பில் இருந்தார். நாங்கள் அவர் சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறோம். நான் மன்னராகும் இத்தருணத்தில் மகன் வில்லியம்ஸ், வேல்ஸ் இளவரசராகிறார். 

இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் கோமகன் பதவியேற்கிறார். இத்தருணத்தில் 2-வது மகன் ஹேரி மீதான அன்பை வெளிபப்டுத்துகிறேன். என் அம்மா செய்த அத்தனைக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்’ என்று உரை நிகழ்த்தினார்.

மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

Follow Us:
Download App:
  • android
  • ios