ஆமாம்  கடந்த சில மாசமா  மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக மரண கிழி,  விமர்சனம் பண்ணுவதில் மர்கயா பண்ணிவந்த துணை சபா தம்பிதுரை  இன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தபோது அப்படியே பெட்டிப் பாம்பாக அடங்கிப்போனதை பார்க்க முடிந்தது.

மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  அடிக்கல் நாட்டுவதற்காக மதுரை வருகை தந்தார். மதுரை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்திறங்கிய மோடிக்கு, ஆளுநர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,  லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரையும் வரவேற்க முதல் ஆளாக நின்றுகொண்டிருந்தார்.

புத்தகம் ஒன்றை பரிசளித்து பிரதமர் மோடியை தம்பிதுரை வரவேற்றார். இன்முகத்துடன் மோடியை வரவேற்ற தம்பிதுரை, பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தார். அப்போது மோடிக்கு இரு இருக்கைகள் தள்ளி தம்பிதுரை அமர வைக்கப்பட்டார். மோடிக்கு அடுத்ததாக ஆளுநர் அதற்கு அடுத்தபடியாக தம்பிதுரையும் அமர வைக்கப்பட்டிருந்தனர். 

அப்பப்பா... இத்தனைநாளா மனுஷன் இந்த அன்பை எங்க வச்சிருந்தார் என சொல்லும் அளவிற்கு தம்பிதுரை காண்பித்த அன்பும், அவருக்கு மேடையில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அடிமைபோல நடத்தி வருகிறார்கள், இனி ஒருகாலம் எங்களை அப்படி நடத்தமுடியாது என்று பத்திரிகையாளர்களிடம் கர்ஜித்த நம்ம துணை சபா தூக்குதுரை மன்னிக்கணும் தம்பிதுரையா இது?  என பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். 

எல்லாம் வெறும் நாடகம் என பாஜகவை தமிழிசை, எச்.ராஜா மற்றும் எதிர்க்கட்சிகள் வரை  தம்பிதுரை இப்படி அந்தர் பல்டி அடிப்பார் என சொல்லி வாய் மூடுவதற்குள் மனுஷன் இப்படி பண்ணிட்டாரே?  என வலைத்தளங்களிலும் பலர்  கிழித்தெடுத்து வருகின்றனர்.  
ஆனா இதைப்பற்றி  கேட்டால் என்ன சொல்றாங்க தெரியுமா? புரோட்டோக்கால் படி, லோக்சபா துணை சபாநாயகர் பதவியில் உள்ள தம்பிதுரைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. மற்றபடி இது அந்தர்பல்டியோ, குட்டிக்கரணமோ இல்லை என அடித்து சொல்கிறது அதிமுக தரப்பு.