நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால், வரவேற்கிறேன் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல், தமிழக அரசில் ஊழல் பெருகி உள்ளதாக பேட்டி அளித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர்கள் பல்வேறு பேட்டி அளித்தனர். இதனால், அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து கமல், தனது ரசிர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தார். அதில், அந்தந்த பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் செய்யும் ஊழல்களை, அமைச்சர்களின் இணையதளத்துக்கு புகாரா அனுப்பும்படி கூறியிருந்தார்.

இதையொட்டி, தினமும் பொதுமக்கள் அனுப்பிய புகார்களால், அமைச்சர்களின் இணையதளம் குறித்த விவரங்கள் மாயமாகிவிட்டன.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால், வரவேற்கிறேன் என கூறினார். அப்போது, அவர் அளித்த பேட்டி.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அதற்கு முழு உரிமை உண்டு. ஆனால் கமல்ஹாசன், எந்த திசையை நோக்கி பயணிக்கிறார் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

டெங்கு காய்ச்சல் குறித்து நடிகர் கமல், கருத்து தெரிவித்து, அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பதவியில் இருந்து விலகும்படி கூறி இருப்பது அமைச்சர்களையா, அதிகாரிகளையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். தற்போது தமிழக அரசு டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.