thambidurai pressmeet about gst

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று ஜிஎஸ்டி யில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் வேறு வழியில்லாமல்தான் தாங்கள் இதை ஆதரிப்பதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவை கொண்டு வந்ததே திமுக.,வும் காங்கிரசும் தான். இப்போது அவர்களே குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநிலங்களின் உரிமைகள் பறிபோக காரணமாக இருந்தவர்கள் திமுக.,வும் காங்கிரசும் தான் என்று அவர் குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று சில மாற்றங்களை மத்திய அரசு செய்திருக்கிறது என தெரிவித்த தம்பிதுரை, இந்த ஜிஎஸ்டி எங்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வேறு வழியே இல்லாமல் ஜிஎஸ்டியை ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடுகிறோம் என்றும் , நாங்கள் செல்லும் பாதை சரியான பாதை. விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை மீட்டெடுப்போம் என்றும் தம்பிதுரை கூறினார்.