thambidurai against GST

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களின் உரிமை பறிபோவதாகவும், மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வருவாய் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் மோடி அரசு குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். கட்சியை அமைச்சர்கள் சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார்கள் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

இந்த ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், இதை ஒரு போதும் யாராலும் அசைக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

திமுகவில்தான் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்றும், அதிமுகவில் குடும்ப அரசியலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு போதம் அனுமதித்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார், ஆனால் ஒரு போதும் அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிமுக எம்பிக்கள் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என தம்பிதுரை தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களின் உரிமை பறிபோவதாகவும், மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வருவாய் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் தம்பிதுரை அதிரடியாக குற்றம்சாட்டினார்.

மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.