நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரவு 7 மணிக்கு அப்பல்லோ செல்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று மாலை திடீரென மக்களவை துணை சபாநாயகருமான கரூர் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் சீனியர் மோஸ்ட் தலைவருமான தம்பிதுரைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனே கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தம்பிதுரையின் உடல் நலம் குறித்து விசாரித்த இன்று இரவு 7 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் விரைகின்றனர்.