காவேரி மருத்துவமனையில் 6-வது நாளாக சிகிச்சை பெற்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற அஜித்குமார் சுமார் 20 நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு சென்றார்.

கடந்த 27-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் கருணாநிதி, டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை  தேறி வருகிறார். அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 6நாட்கள் இரவு பகலாக வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல்  காவேரி முன்பாக காத்து கிடந்த தொண்டர்கள்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர்கள், துணை ஜனாதிபதி, தமழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் என ஒவ்வொருவராக காவேரியை நோக்கி படையெடுத்து வந்தனர். அதேபோல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பெரும் திரளாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு  கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித் குமார் சென்றார். அப்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளித்துக்  கொண்டிருந்த நேரத்தில் அஜித் வந்ததால் அவரால் அவரால் கருணாநிதியை உடனடியாக உள்ளே சென்று பார்க்க முடியவில்லை, இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்து கருணாநிதியை சந்தித்துவிட்டு  பிறகு  ஸ்டாலின் மற்றும்  உதயநிதியிடம் பேசிவிட்டு வந்துள்ளார்.

20 நிமிடம் காத்திருந்து கருணாநிதியை பார்த்துவிட்டு வந்த விஷயம் அஜித் ரசிகர்களுக்கு தெரிந்ததால், தல எப்பவுமே சிம்பிள் தான், தல தான் மாஸ் என புகழ்ந்து வருகிறார்கள்.