ஆசிரியர்களுக்காக நடக்கும் டெட் என அழைக்கப்படும் டெட் தேர்வு வரும் ஜீன் மாதம் 8,9-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டுமானால் இந்த டெட் தேர்வை இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். இந்த டெட் தேர்வானது இரு தாள்களை கொண்டது. இருதாள்களும் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், இரண்டாம் தாள் தேர்ச்சி பெறுபவர்கள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பமானது இணையதளத்தில் கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வை எழுதுவதற்காக ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இதனால் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஜீன் 8-ல் முதல் தாளும், ஜீன் 9-ல் இரண்டாம் தாளானது நடைபெறும் என தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.