தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, வேலூர்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராயப்பேட்டை, திருவண்ணா மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது

அடுத்த 48 மணி நேரத்திற்கு 13-9-2020 வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர, தர்மபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்ய கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையொட்டி பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில், தேவாலா, (நீலகிரி) 6 சென்டிமீட்டர் மழையும், அவலாஞ்சி (நீலகிரி) 5 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை (கோவை) 4 சென்டிமீட்டர் மழையும், மேல் பவானி நீலகிரி சோலையார் (கோவை) சின்னக்கல்லார் (கோவை) தலா 3 சென்டிமீட்டர் மழையும், பந்தலூர் (நீலகிரி) மேல் கூடலூர் (நீலகிரி) கூடலூர் பஜார் (நீலகிரி) சின்கோனா (கோவை) வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை) தல 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 12-13 மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 12-13 கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 வரை கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை மத்திய மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13-1-2020  இரவு 11:30  மணி வரை கடல் உயரலை 3 முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக்கூடும், எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.