Asianet News TamilAsianet News Tamil

சீன எல்லையில் மீண்டும் பதட்டம்.. முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு.!

சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது. ஆனால், அண்மைகாலமாக சீனாவை இந்தியா பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களும் அங்கு முகாமிட்டுள்ளன. இது முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

Tensions on Chinese border again .. Troops ordered to be ready.!
Author
Tamilnadu, First Published Sep 4, 2020, 7:41 AM IST

சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது. ஆனால், அண்மைகாலமாக சீனாவை இந்தியா பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களும் அங்கு முகாமிட்டுள்ளன. இது முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.இந்தநிலையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் மீண்டும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tensions on Chinese border again .. Troops ordered to be ready.!

இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள ராணுவ தளபதி நராவனே, எல்லை பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, பின்னர் தணிந்தது.

கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

Tensions on Chinese border again .. Troops ordered to be ready.!

லடாக் எல்லை பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்றால் ராணுவ ரீதியாக தீர்வு காணப்படும் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பின்னணியில் ராணுவ தளபதி நராவனே, 2 நாள் பயணமாக நேற்று லடாக் புறப்பட்டு சென்றார். லடாக் எல்லை பகுதிகளில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார். சீனாவின் அத்துமீறல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் மட்டு மன்றி வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 "லடாக் மட்டுமன்றி வடகிழக்கிலும் சீன ராணு வம் அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை கருத் தில்கொண்டு சீன எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கிழக்கு விமானப் படை தலைமையகமான மேகாலயாவின் ஷில்லாங்கில் கடந்த புதன்கிழமை விரிவான ஆய்வு நடத்தினார். வடகிழக்கு எல்லைப் பகுதி களில் ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். எதையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.பான்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் 3 முக்கிய மலைமுகடு களையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது சீன படைக்கு பெரும் பின்னடை வாக கருதப்படுகிறது. பான்காங் ஏரி யில் சீனா மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tensions on Chinese border again .. Troops ordered to be ready.!

சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வந்தது. ஆனால், அண்மைகாலமாக சீனாவை இந்தியா பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களும் அங்கு முகாமிட்டுள்ளன. இது முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்  காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சீன விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 3 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா சென்றுள்ளார். இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ரஷ்ய பயணத்தின்போது சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கியை, ராஜ்நாத் சிங் சந்தித்து பேச மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tensions on Chinese border again .. Troops ordered to be ready.!

இந்த பயணத்தின்போது எஸ்-400 ரக ஏவுகணைகளை விரைந்து வழங்க ரஷ்யாவை ராஜ்நாத் சிங் வலியுறுத்த உள்ளார். மேலும் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை பெருமளவில் கொள் முதல் செய்வது குறித்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios