Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா.. ஒருவழியாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரை அறிவித்த பொதுச்செயலாளர் துரைமுருகன்.!

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

Tenkasi North District DMK Secretary Raja selected
Author
First Published Nov 3, 2022, 11:47 AM IST

திமுகவின் 71 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- பால்வாடித்தனமான அரசியல் செய்கிறார்... அண்ணாமலையை கடுமையாக சாடிய திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி!!

Tenkasi North District DMK Secretary Raja selected

அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுக அமைப்பில் உள்ள 72  மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்,  7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடாமல் இருந்து வந்தது. 

இதையும் படிங்க;-  கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்

Tenkasi North District DMK Secretary Raja selected

இதற்கு காரணம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா செய்ததும், மாவட்ட செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே காரணம் என்று கூறப்பட்டது. உட்கட்சி பிரச்சனையால் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரை மட்டும் நியமிக்க முடியாமல் தலைமை திணறி வந்தது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜாவை நியமித்துள்ளார். அதேபோல், தலைமைக்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க;-  முதல்வர் காட்டுபவர் தான் வருங்கால பிரதமர்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி!!

Follow Us:
Download App:
  • android
  • ios