Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் ஆளுநரா, பாஜக தலைவரா..? தமிழிசையை தெறிக்கவிட்ட தெலங்கானா எம்.எல்.ஏ...!

தெலங்கானா ஆளுநர் பாஜக தலைவர் போல செயல்படுவது வருத்தமளிக்கிறது என்று ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.

Telangana mla critisis governor Tamilisai
Author
Hyderabad, First Published Aug 21, 2020, 9:25 PM IST

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் இருக்கிறார். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆளுநர் தமிழிசை அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழிசை பேட்டி அளித்தார்.

Telangana mla critisis governor Tamilisai
அந்தப் பேட்டியில், “நாட்டில் 80 சதவீத கொரோனா நோயாளிகள் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து பதிவாகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதில் தெலங்கானாவும் ஒன்று. தெலங்கானாவில் தினமும் 50-ல் தொடங்கி தற்போது 2500 நோயாளிகள் பதிவாகிறார்கள். கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்க ஐ.சி.எம்.ஆர். அனுமதித்தும், தெலங்கானா அரசு தயங்கியது. மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இது போதுமானது அல்ல.” என்று தமிழிசை தெரிவித்திருந்தார்.

Telangana mla critisis governor Tamilisai
இதுதொடர்பாக முதல்வருக்கு தமிழிசை கடிதங்கள் எழுதியும் அவருடைய பரிந்துரைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தெலங்கானா அரசை அவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழிசையின் இந்த விமர்சனம் தெலங்கானாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ. சைதி ரெட்டி உடனடியாக எதிர்வினையாற்றினார். Telangana mla critisis governor Tamilisai
“தெலங்கானா ஆளுநர் பாஜக தலைவர் போல செயல்படுவது வருத்தமளிக்கிறது. மத்திய, மாநில அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டுகே முதல்வர் வழிகாட்டியாக உள்ளார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தெலங்கானாவில்தன் கிராம அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பதிவை ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பதிவை எம்.எல்.ஏ. சைதி நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios