கோழி கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த தகவலையடுத்து இது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் பொதுமேடையில் தெலங்கானா அமைச்சர்கள் கோழி கறி சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்  அமைச்சர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். 

கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிகறிகள் மூலமாக இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது .  கரோனா வைரஸ் பீதி காரணமாக ஏராளமான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தினார் .  இதனால் இந்தியா முழுவதும் கோழிக்கறி விற்பனை வெகுவாக குறைந்தது இந்நிலையில் இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . இந்நிலையில்  மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையில்   தெலுங்கானா மாநில மந்திரிகள் பொதுக்கூட்ட மேடையில் கோழிக்கறி சாப்பிட்டனர் ஐதராபாத்தில் டாங்க் பந்த் பகுதியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா மந்திரிகள் கே.டி ராமாராவ்,  எடிலம் ராஜேந்தர்,  தளாசானி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்