உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிட தமிழ்ப் புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு நாளைக் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டம் களையிழந்துள்ளது. என்றபோதும் தமிழக தலைவர்கள் பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.


அதில், “அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு சித்திரை 1 , இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நேரத்தில் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிடவும் இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும். நம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.