ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’உண்மையிலேயே 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா..? உண்மை நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர். எதற்காக ஊடகங்களும் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல் இப்படிபட்ட செய்தியை வெளியிடுகிறீர்கள்?

இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது. தனது அதிகார பலத்தை காண்பித்து அவர்களை நசுக்க பார்ப்பதைவிடுத்து, ஆசிரியர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.