கபசுர குடிநீரை ரேசன் கடையில்  வழங்கிடவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து  அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி  இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  சுமார்  32 பேர் உயிரிழந்துள்ளனர் . 

தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை  124 ஆக உயர்ந்துள்ளது . மாநில அரசு முழு மூச்சாக கொரோனா வைரஸ் பரவலை  தடுப்பில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளது  இலட்சக்கணக்கான உயரதிகாரிகள் மருத்துவர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை தன்னலமின்றி  பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.  இந்நிலையில் தங்களை நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்புசக்தியினை பெருக்க மக்கள் பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கபசுர குடிநீரை மக்கள் ஊரடங்கையும் மீறி வாங்கவருவதால் கொரோனா பரவல் அதிகரித்து சமூகப் பரவலாகிவிடுமோ  என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே  மக்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் கபசுர குடிநீரையோ அல்லது அதற்குரிய மூலிகைப்பொருளையோ இலவசமாக ரேசன் கடைகளில் வழங்க  அரசு ஆவனசெய்யு வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.