பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் உடனடியாக தற்காலி ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி இடத்தில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.