Asianet News TamilAsianet News Tamil

ஃபேமிலியா இருக்க போர்க்கால அடிப்படையில் இதை செய்யுங்க...!! அமைச்சருக்கு அட்வைஸ் செய்த ஆசிரியர்கள்...!!

குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணித்தொடர காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்திசெய்திடும் வகையில் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை

teacher's association demand to conduct counselling and promotion for government school teachers
Author
Chennai, First Published Oct 4, 2019, 12:28 PM IST

ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் இருந்து மனநிறைவோடு பணித்தொடர, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கை விவரம் :-

teacher's association demand to conduct counselling and promotion for government school teachers 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை கடந்தகாலங்களில் ஆசிரியர் இடமாறுதல்- பதவி உயர்வு பொதுக்கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்பட்டு ஜுன் மாதத்தில் பணியேற்பார்கள். கற்றல்-கற்பித்தல் தடையின்றி சிறப்பாக நடைபெற்றது. தற்போது  பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக  அரசின் தவறான முடிவு மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால் மட்டும் இடமாறுதல் உள்ளிட்ட  வழக்குகள் என பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் காலாண்டுத்தேர்வும் முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களின்றி பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்பெரிதும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள். 

teacher's association demand to conduct counselling and promotion for government school teachers

மேலும், அனைத்து வழக்குகளும் நேற்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில்  முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளர்த்தி 2019-20 ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.   எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதியும் ,இந்த ஆண்டு முதலாவது குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணித்தொடர காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்திசெய்திடும் வகையில் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவுடன் கோட்டுக்கொள்கிறது என அதில் கோரப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios