தாய் - தந்தைக்குப் பிறகு உயர்வாக போற்றும் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியை ஒருவர், மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு பலரும் கடுமையாக கருத்து கூறி வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனின் எதிர்காலத்தை வீணடித்த அந்த ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலாவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஃபெரோனா (40) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஃபெரோனா, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், ஃபெரோனா பணிபுரியும் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ஒரு மாணவனை பிடித்துப் போயுள்ளது. வகுப்பு முடிந்த பிறகும், அந்த மாணவனிடம் அவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். ஆசிரியர் - மாணவன் என்பதையும் மீறி அவர்கள் நெருங்கி பழங்கி வந்துள்ளனர். மாணவனின் பேச்சு, ஆசிரியைக்கு பிடித்துப் போயுள்ளது.

பள்ளி முடிந்து வீட்டுக்குப் போனாலும், அந்த மாணவனின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையில் ஃபெரோனா இருந்துள்ளார். இதனால், அந்த மாணவனுக்கு செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். பள்ளியில் பேசுவதோடு மட்டுமல்லாமல், மாணவன் வீட்டுக்கு சென்ற பிறகும், மணிக்கணக்கில் இவர்கள் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், மாணவன் காணவில்லை என்று அவனது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் மாணவனை தேடி வந்தனர். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மாணவன் பயின்று வந்த பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஃபெரோனாவும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர்.

ஃபெரோனாவையும், மாணவனையும் போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் அவர்கள் இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

சென்னை, சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆசிரியை ஃபெரோனா கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், தாய் - மகன் என்று கூறி, தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் ஆசிரியை ஒருவர், மகன் வயது மாணவனிடம் தகாத உறவு கொண்டிருப்பதற்கு பதில், மற்றொரு திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்றும், தாய் - தந்தைக்குப் பிறகு குரு என்ற உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் அவரின் தரம் தாழ்ந்த செயலுக்கு, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.