Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களின் பரிதாப நிலையறிந்து தமிழக அரசு எடுத்த அசத்தலான முடிவு... இனி தடையே கிடையாது..!

 ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீடிக்கப் பட்டதால் சரக்கு கிடைக்காமல் தவியாய் தவித்து வருகின்றனர். 

tasmac of the Government of Tamil Nadu is a strange decisio
Author
Tamil Nadu, First Published Apr 16, 2020, 5:44 PM IST

மது அருந்துவதில் குடித்த வாடை தெரியாமல்  கவுரவமாக வலம் வருவதாக காட்டி கொள்பவரும் சரி... குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவர்களும் சரி. இரு தரப்பினருமே இப்போது சரக்கு கிடைக்காமல் ஏங்கி தவித்து வருகின்றனர்.tasmac of the Government of Tamil Nadu is a strange decisio

தற்போது ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீடிக்கப் பட்டதால் சரக்கு கிடைக்காமல் தவியாய் தவித்து வருகின்றனர். மனரீதியாக குழப்பத்தில் உள்ளவர்களுக்கும், மதுவிலிருந்து விலகி இருப்பதால் உடல் ரீதியாக பாதிப்பில் இருப்பவர்கள் தீர்வுகளை வழங்க தயாராக இருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

பலருக்கு பல சோதனைகள் என்றால், மது பிரியர்களுக்கு சரக்கு மட்டுமே பிரதானம். கிட்டத்தட்ட அனைவரையும்விட, பரிதாப நிலையில் இருப்பவர்கள் குடிமகன்கள் தான். அன்றாடம் குடிக்கும் குடிமகன்கள் இந்த ஊரடங்கு பெரியளவில் மனதளவிலும், உடலளவிலும் பெரிதளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இந்த ஊரடங்கு குடியில் இருந்து மீள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். tasmac of the Government of Tamil Nadu is a strange decisio

குடிப்பழக்கத்துக்கு மிக மோசமான அளவில் அடிமைப்பட்டு இருப்பவர்களில் சிலர் மதுவுக்கு மாற்றாக ஷேவிங் லோசன்களில் தண்ணீர் கலந்து குடிப்பது, சானிட்டைசர்களில் எலுமிச்சை கலந்து குடிப்பது தண்ணீர் கலந்து குடிப்பது என பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணக்கார குடிகாரர்களும்  மதுவுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் கொடுத்துவிட்டு ஏமாற்றத்தோடு தவித்து வருகின்றனர்.

இது போன்றவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனைகளையும், மாத்திரைகளையும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது அரசு மருத்துவ இயக்குனரகம். தமிழக அரசின் 104 என்கிற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்தால் உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. tasmac of the Government of Tamil Nadu is a strange decisio

குடிக்கு அடிமையானவர்கள் மட்டுமல்லாமல் ஊரடங்கால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 104 என்கிற எண்ணிற்கு அழைத்தால் மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஊரடங்கு காலத்தை உடலையும், மனதையும் பக்குவப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதி நேர்மறை சிந்தனைகளை உருவாக்கி புதியதொரு அனுபவத்தில் அடியெடுத்து வைக்க குடிமகன்கள் முயற்சித்தால் குடும்பமும், அவர்களது ஆரோக்கியமும் வலுப்பெறும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios