Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்.... அமைச்சரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை!

டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார்.

TASMAC Income to Salary for teachers
Author
Vellore, First Published Aug 26, 2018, 11:25 AM IST

டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார். TASMAC Income to Salary for teachers

அப்போது அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது மதுபோதையில் முதியவர் ரகளை ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்றினர். பிறகு தொடர்ந்து பேசிய அமைச்சர் டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது என்றார். TASMAC Income to Salary for teachers

அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும் என்றார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களிடம் முதலில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் மதுகுடிக்க ஊக்குவிப்பதை போல் அமைச்சரின் கருத்து இருப்பதாக கூறியுள்ளனர். இவரின் பேச்சுக்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios